சென்னானூர் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ‘டோலராய்டு’ என்னும் மூலக்கற்களில் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள். 
தமிழகம்

குன்னூர் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை: தொடரும் மண் சரிவால் பாதுகாப்பு இல்லாத நிலையில் வீடுகள்

செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குன்னூர் நகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட காட்டேரி சாலை பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டின் முன்புறம் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்தப் பகுதியில் பாதுகாப்பின்றி வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஏற்கெனவே, இந்தப் பகுதிக்கு எந்த வளர்ச்சித் திட்டப் பணிகளும் செயல்படுத்தாத நிலையில், மழை மற்றும் கழிவுநீர் செல்ல முடியாமல் இந்த சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை: மேலும், இரவும், பகலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இங்கிருக்கும் வீடுகள் எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழும் ஆபத்து உள்ளது. இதனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, முறையாக தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்துத் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT