தமிழகம்

மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. திமுக தலைவரின் அன்பு நண்பராக – திமுகவோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் அவரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT