தமிழகம்

மெரினாவில் போலீஸாருடன் தகராறு செய்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் போலீஸாருடன் தகராறு செய்த நபர் மற்றும் அவரது தோழியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் எடுக்கும்படி கூறியுள்ளனர். இதி்ல் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த காரில் வந்த வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அதையடுத்து இருவர் மீதும் மயிலாப்பூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செயது இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்திக்கேயன் முன்பாக இன்று நடந்தது. அப்போது காவல்துறை சார்பில், இருவருக்கும் ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT