தமிழகம்

இந்திய விதைச் சந்தையைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் சதி: விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை

செய்திப்பிரிவு

இந்திய விதைச் சந்தையை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்வதாக பூவுலகின் நண்பர்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் கு.சிவராமன், அரச்சலூர் செல்வம், மதுரை பாமயன், இந்திய உழவர் உழைப்பாளி கட்சியைச் சேர்ந்த வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

`மனிதர்களுக்கும், கால்நடை களுக்கும், இயற்கைச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதை ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று கடந்த நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு மாறாக தற்போது 13 மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளிகளில் பயிர் செய்து சோதனை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதுபற்றி எந்த கருத்தையும் கூறாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மவுனம் காக்கிறார்.

வாய் திறக்காமல் மவுனம்

முந்தைய ஆட்சியில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்ததால் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பாதிக்கப் பட்டது போல, தானும் பாதிக்கப் பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு பிரகாஷ் ஜவ டேகர் வாய் திறக்காமல் மவுனம் காக்கிறாரோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒருபோதும் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என ஜெயலலிதா கூறியுள்ளார்

மரபணு மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டால் இந்தியா வில் உள்ள பாரம்பரிய விதைகள் அனைத்தும் அழிந்து போகும். அதன் பிறகு தங்களுக்கான விதை களை தாங்களே உற்பத்தி செய்யும் ஆற்றலை விவசாயிகள் இழப்பார்கள். மரபணு மாற்றுப் பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விதைகள் முளைப் பதில்லை.

நமது சாகுபடிக்கான விதை களுக்காக பன்னாட்டு நிறுவனங் களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் மூலம் இந்திய விதைச் சந்தை யையும், காலப்போக்கில் இந்தி யாவின் ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற சதித் திட்டத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மரபணு மாற்றுப் பயிர்களால் உணவு உற்பத்தியை பெருக்க முடியாது. பூச்சித் தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில் எவ்வித அவசியமும் இன்றி, பன்னாட்டு நிறுவனங்ளின் நலன்களுக்காக மட்டும் இந்தி யாவில் மரபணு மாற்று பயிர்களை பரவலாக்குவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT