தமிழகம்

மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 144  தடை உத்தரவு

இ.ஜெகநாதன்

சிவகங்கை: விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி, அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 (பிஎன்எஸ் 163) தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில் நாளை (அக்.24) விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப் படுகிறது. மேலும், சமுதாய அமைப்பு சார்பில் அக்.27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஸ் பரிந்துரையில் அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் பிஎன்எஸ் 163 தடை (144 தடை உத்தரவு) உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT