தமிழகம்

ராமேசுவரம்: நடுக்கடலில் வலையில் சிக்கிய ஆமையை உயிருடன் மீட்ட  இந்திய கடலோர காவல்படையினர்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: நடுக்கடலில் வலையில் சிக்கியிருந்த ஆலிவர் ரெட்லி ஆமையை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர் மீண்டும் அதை உயிருடன் கடலில் விட்டனர்.

இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலான 'ராணி அப்பாக்கா' வங்காள விரிகுடா கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரோந்துப் பணியின் போது, நடுக்கடலில் மீனவர்களால் கைவிடப்பட்ட வலையை கண்டனர். அந்த வலையில் பெரிய ஆலிவ் ரெட்லி ஆமை ஒன்று சிக்கியிருந்தது.

கப்பலிலிருந்து சிறிய மிதவை படகு மூலம் கடலோர காவல்படை வீரர்கள் அந்த வலை அருகே சென்று நீண்ட நேரம் போராடி அந்த வலைகளிலிருந்து ஆமையை உயிருடன் விடுவித்தனர். மீட்கப்பட்ட ஆமை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ன் அட்டவணை 1-ன் கீழ், அழிந்து வரும் உயிரினத்தைச் சேர்ந்ததாகும்.

SCROLL FOR NEXT