தமிழகம்

அரசு பழைய ஓய்வூதியத்‌திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம்

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: அரசு பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர்‌ ஒன்றியத்தின்‌மத்திய செயற்குழு கூட்டம்‌ நீலகிரி மாவட்டம்‌, உதகையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ‌மாநிலத் ‌தலைவர்‌ த.அமிர்தகுமார்‌ தலைமை வகித்து, கடந்த மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள்‌ துணை முதல்வர்‌, அமைச்சர்‌கள்‌, துறை செயலாளர்கள்‌, துறை இயக்குநர்கள் ‌உட்பட்ட அலுவலர்‌ சந்திப்புகள்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ நலன்‌சார்ந்த விஷயங்கள்‌ பற்றி கூறினார்‌.

தமிழ்நாடு தேர்வுத்‌துறை அலுவலர்‌ சங்கத்தின் மாநில தலைவர்‌ குமார்‌முன்னிலை வகித்தார்‌. நீலகிரி மாவட்டத்‌தலைவர் ‌பி.சி.ஷாஜி வரவேற்றார். இக்கூட்டத்தில் ‌அகவிலைப்படி உயர்வை உடனே அறிவித்தமைக்கும்‌, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவித்த தமிழ்நாடு அரசின்‌ தலைமை செயலாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள பங்களிப்பு ஒய்வூதியத்‌ திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்‌விடுப்பு சலுகையினை மீண்டும்‌ வழங்க வேண்டும், 21 மாத 7-வது ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவக்‌காப்பீடு திட்டத்தினை அரசே ஏற்று நடத்த வேண்டும்‌, சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள்‌, துப்புரவு பணியாளர்கள்‌, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்‌, என்எம்ஆர் பணியாளர்கள்‌, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள்‌, துப்புரவு காவலர்கள்‌, பண்ணை பணியாளர்கள்‌ மற்றும்‌ பள்ளி சாரா கல்வி பணியாளர்கள்‌ உள்ளிட்டவர்களை தேர்தல்‌ அறிக்கையில்‌ தெரிவித்ததை போல பணி நிரந்தரம்‌ செய்து காலமுறை ஊதியம்‌ வழங்க வேண்டும்‌.

மேலும், கல்வித்‌துறையில்‌ பணியாற்றும்‌ இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளருக்கு கால தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்‌உள்ளிட்ட 46 தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில்‌ ஒன்றிய சட்ட ஆலோசகர்‌ கவி வீரப்பன்‌, மாநில துணைத்‌ தலைவர்கள்‌ ராஜேந்திரன்‌ உட்பட மாநில நிர்வாகிகள்‌, மாவட்டத்‌ தலைவர்கள்‌, மத்திய செயற்குழு உறுப்பினர்கள்‌, இணைப்பு சங்கங்களின்‌ மாநிலத்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ அணி நிர்வாகிகள்‌ கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்ட துணைத்‌ தலைவர்‌ சிவாஜி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT