தமிழகம்

செல்போன் விற்பனை மைய உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபலசெல்போன் விற்பனை நிறுவனம், ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு உரிய கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ள அந்நிறுவன உரிமையாளர் வீடு,பல்லாவரத்தில் உள்ள தலைமை அலுவலகம், பள்ளிக்கரணையில் உள்ள கிளை அலுவலகம் என 3 இடங்களில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தசோதனை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. வரி ஏய்ப்புசெய்யப்பட்டதற்கான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி,அதுகுறித்து உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களை வெளியிட முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT