தமிழகம்

வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை: பாமக பொதுக் கூட்டங்கள் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு வடலூர், திண்டிவனம் மற்றும் சேலத்தில் நடைபெறவிருந்த பாமக பொதுக்கூட்டங்களை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ம் தேதி வடலூர், 20-ம் தேதி திண்டிவனம், 26-ம் தேதி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT