தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா: அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று (அக்.9) முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மேயருமான மு. அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம்.ஆனந்த், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இம்மானுவேல் சேகரனார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT