சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இன்றுமுதல் நீச்சல் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
தனியார் பராமரிப்பில் இருந்த மெரினா நீச்சல் குளம், தற்போது ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி நேரடியாகப் பராமரித்திட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அதையடுத்து, நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம்செலுத்துவதற்கான க்யூஆர் கோடுசேவையையும் தொடங்கிவைத் தார். பின்னர் நீச்சல் குளத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொடியசைத்து துணை முதல்வர் தொடங்கிவைத்தார்.
நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். காலை 8.30 முதல் 9.30 மணிவரை பெண்களுக்கான நேரம் ஆகும். நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரம் குளிப்பதற்கு 14 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.50. ஆன்-லைனில் செலுத்தினால் (10 சதவீதம் சிறப்புச் சலுகை) ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படும். 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.30. ஆன்-லைனில் செலுத்தினால் ரூ.25 வசூலிக்கப்படும்.
பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமைதோறும் நீச்சல் குளத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. முதலில்ஷவரில் நன்றாக குளித்த பிறகுதான்நீச்சல் குளத்துக்குள் இறங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஆண்கள் பனியன்,பேன்ட், லுங்கி, டவல் அணிந்து நீந்தஅனுமதி இல்லை. முறையான நீச்சல் உடையில் இருக்கவேண்டும்.
பெண்கள் முறையான நீச்சல்உடை அல்லது சுடிதார் அணியலாம். சேலை, பாவாடை, நைட்டி, மிடி அணிந்து நீந்த அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.