தமிழகம்

தேசியக் கொடிகளைத் தயாரிக்கும் மகளிர் கூட்டமைப்பினர்: சுதந்திர தினம் நெருங்குவதால் பணி மும்முரம்

செய்திப்பிரிவு

சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடியில் மகளிர் கூட்டமைப்பினர் தேசியக் கொடிகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பூவசரக்குடியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் இணைந்து, பெண்களுக்குத் தேவையான உடைகளைத் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். ஏறத்தாழ 5 ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில், அதிக அளவில் உடைகளைத் தைக்கின்றனர். மேலும், சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி தேசியக் கொடிகளையும் தயாரித்து, விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து மகளிர் கூட்டமைப் பினர் கூறியது: “சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்காக பள்ளி, கல்லூரிகளில் விற்பனை செய்வ தற்காக தேசியக் கொடிகள் தயார்செய்து வருகிறோம். கொடி யின் அளவுக்கேற்ப ரூ.25, ரூ.75, ரூ.125 மற்றும் ரூ.175 என்ற விலை களில் கொடிகளை விற்கிறோம். ஆர்டர் கொடுத்த பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் கடைகளுக்கு ஓரிரு நாட்களில் கொடிகளை வழங்க வேண்டும் என்பதால் இரவு, பகலாக வேலை செய்து வருகி றோம். இதில் மற்ற வியாபாரத்தைப் போல லாபம் கிடைக்காவிட்டாலும், நாங்கள் பார்க்கும் வேலைக்கு கூலி கிடைத்து விடுகிறது. மேலும், தேசியக் கொடியைத் தயாரிக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் கிடைக்கிறது” என்றனர்.

SCROLL FOR NEXT