தமிழகம்

கோயிலிலிருந்து திரிசூலம் களவு: ராமநாதபுர மாவட்டம் தேவிப்பட்டிணத்தில் பதற்றம்

டி.ஜே.வால்டர் ஸ்காட்

இரண்டு நாட்களுக்கு முன்னால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலைக் கொள்ளையடித்த கும்பல் ஒன்று திரிசூலத்தைக் களவாடிச் சென்றது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

பீடம் ஒன்றில் நடப்பட்டிருந்த திரிசூலம் கட்டிட அமைப்பு இல்லாததால் வியாழனன்று களவாடப்பட்டது. மாரியம்மாள் என்பவரது குடும்பம் கடா வெட்டி வழிபாடு செய்த பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக இந்த இடத்தைச் சுற்றி உள்ளூர்வாசிகள் வேலி அமைத்தனர்.

இது தொடர்பாக இந்த இடத்தைப் பராமரித்து வந்த வைரவன் (32) என்பவர் கொடுத்த புகாரின்படி தேவிப்பட்டிணம் போலீஸார் அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சில சந்தேகத்துக்குரிய நபர்களை போலீஸார் விசாரித்து வரும் நிலையில் பழம்கோட்டை பகுதி மக்கள் இங்கு கோயில் கட்ட முயற்சி செய்தனர், ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு இது புறம்போக்கு நிலம் என்று தடுத்தனர்.

ஆனால் புகாரில் சுமார் 40 ஆண்டுகளாக இந்த இடத்தில் தாங்கள் வழிபாடு நடத்தி வருவதாகவும் இப்பகுதியில் கோயிலை விரும்பாத சில சக்திகள்தான் பீடத்திலிருந்து திரிசூலத்தை களவாடிச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரிசூலம் ‘கோயில்’ என்று கூறப்படும் இடத்தருகே புதரில் விட்டெறியப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தவழிபாட்டுப் பகுதியில் அராபியப் பள்ளி ஒன்றும் இருப்பதால், சூழ்நிலையின் பதற்றம் கருதி அதிக போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு இதில் தொடர்பில்லை என்று கூறும் தேவிப்பட்டிணம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஜாகிர் உசைன், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் தருணத்தில் முஸ்லிம்கள் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றும், இந்த மாதம் நாங்கள் பிறருக்கும் உதவும் மாதம் பிறருக்கு பிரச்சினை கொடுக்கும் மாதமல்ல என்று மறுத்தார்.

பாஜக மாவட்டத்தலைவர் முரளிதரன் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துக் கூறும்போது, இந்த மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும்போது சில தீய சக்திகள் பிளவுபடுத்த நினைக்கின்றன. காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT