தமிழகம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது தொலைநோக்கு கொண்ட தலைமை மற்றும் விலைமதிப்பற்ற பணி என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது பகுத்தறிவு மற்றும் அர்ப்பணிப்பு தற்போதையை தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் இன்றி (செப்.26) தனது 92-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மன்மோகன் சிங் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT