தமிழகம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க கோரி மதிமுக உயர்நிலைக் குழுவில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒரேநாடுஒரே தேர்தல் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது, மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும். எனவே, திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும். புதிதாகபொறுப்பேற்றுள்ள இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கைதான மீனவர்களை மீட்பதோடு அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம், சிறை தண்டனை உள்ளிட்டவற்றை நீக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை பொறுப்பில் இருந்து குடியரசுத் தலைவர் விடுவிக்க வேண்டும்.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாகண்டனத்துக்குரியது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முயற்சிக்கு துணைபோகக்கூடாது.

SCROLL FOR NEXT