புதுச்சேரி: கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்த மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று மனு அளித்தார்.
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம், அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி இஎஸ்ஐ மருத்துவமனையை விரிவுப்படுத்தி அனைத்து விதமான மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தரம் உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.