கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஜூன் 23-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக் கில், கொலை தொடர்பாக பொது மக்களுக்கு தெரிந்த தகவலைப் பெற பிச்சம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 அஞ்சல் அட்டைகளை போலீஸார் விநியோகம் செய்துள்ளனர்.
இக்கொலை தொடர்பாக 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. சந்தேகத்தின்பேரில் 10-க் கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் அப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
கொலை செய்யப்பட்ட பெண் ணுடன் வேலைக்கு சென்றவர்கள், வேலை பார்த்தவர்கள், அன்று மாலை முதல் இரவு வரை அப்பகுதியில் செல்போன் பயன்படுத்தியவர்களின் எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக வட்டத்திலிருந்தவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் டாஸ் மாக் கடைகளைக் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கொலை குறித்து அறிந்த பொதுமக்கள் போலீஸாரிடம் கூற அச்சப்படலாம் என்பதால் அவர்களுக்கு தெரிந்த தகவல் களை தங்களைப் பற்றிய விவரத்தை வெளியே சொல்லாமல் தெரியப்படுத்தும் வகையில், பிச்சம்பட்டியைச் சுற்றியுள்ள சேங்கல், மேட்டாங் கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸார் மாயனூர் காவல் நிலைய முகவரியைக் கொண்ட 1,000 அஞ்சல் அட்டைகள் மற்றும் காவல் கண் காணிப்பாளர் அலுவலக முகவரியைக் கொண்ட அஞ்சல் அட்டைகள் 500 என மொத்தம் 1,500 அஞ்சல் அட்டைகளை விநியோகம் செய்துள்ளனர்.
கொலை குறித்து அறிந்த பொதுமக்கள் போலீஸாரிடம் கூற அச்சப்படலாம் என்பதால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது