முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி | கோப்புப்படம் 
தமிழகம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்தது:

“பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என அந்த வாழ்த்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT