தமிழகம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உதவியாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட்” நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை வைத்திருந்தனர். இந்த நிதி நிறுவனத்தின் நிரந்த வைப்பு நிதியாக ரூ.525 கோடியும், 300 கிலோ தங்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடிநடந்ததாக புகார் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், அளித்தபுகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். அந்த நிதிநிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தஇந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சென்னையை சேர்ந்த சுதிர் சங்கர் (46) என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்டார். தேவநாதனின் உதவியாளராக இருந்த அவரிடம்போலீஸார் மோசடி குறித்து விசாரணை செய்கின்றனர்.

SCROLL FOR NEXT