தமிழகம்

பொன்னேரி அருகே இரும்பு வியாபாரி கொலை

செய்திப்பிரிவு

பொன்னேரியை அடுத்த அத்திப் பட்டில் கடையில் தூங்கிக் கொண்டிருந்த இரும்பு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

எண்ணூர் வ.உ.சி., தெருவில் வசித்து வந்தவர் ஜான்சன் (38). இவர், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள அனல்மின் நிலைய சாலையில் பழைய இரும்புக் கடை வைத்து இருந் தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலேயே ஜான்சன் தங்கினார். திங்கட்கிழமை அதிகாலை ஜான்சனின் தந்தை தேவபிச்சை இரும்புக் கடைக்குச் சென்றார். அப்போது கடையின் உள்ளே மகன் ஜான்சன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி, தகவல் கிடைத்த தும் பொன்னேரி டிஎஸ்பி எட்வர்ட், இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீஸார்சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த ஜான் சனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடையில் உள்ள தராசு தட்டில் ரத்தக்கறை உள்ளது. எனவே, தராசு தட்டால் ஜான்சன் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பொன்னேரி போலீ ஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்திப்பட்டு பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், தேசிய அனல்மின் நிலையம், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், கப்பல் கட்டும் தளம் ஆகியவை உள்ளது. இங்கு சேருகின்ற பழைய இரும்பு களை வாங்குவதில் வியாபாரிகள் இடையே போட்டி இருந்துள்ளது.

எனவே, தொழில் போட்டி காரணமாக ஜான்சன் கொல்லப் பட்டு இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இரும்பு வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது அத்திப்பட்டு பகுதியில் பொதுமக்கள் இடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT