தமிழகம்

பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் மீது குற்றச்சாட்டு பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மர்லினா ஆன் ஆகியோர், தங்களது வீட்டில் பணிபுரிந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக நீலாங்கரை போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன்பேரில் கைதான இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆண்டோ மதிவாணன்,மர்லினா ஆன் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜராகினர். இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ஒவ்வொன்றாக தெரிவித்து நீதிபதி அல்லி குற்றச்சாட்டை பதிவு செய்தார். பின்னர்,இந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக வரும் செப்.24-க்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT