2-ம் நிலை காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான உடல் தகுதி தேர்வு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நட ைபெ ற்றது. | படம்: ம.பிரபு | 
தமிழகம்

போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், சிறைத் துறையினர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்தாண்டு நடைபெற்றது.

இதற்காக 3,300 பேரை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இதை எதிர்த்து சிலர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 மாவட்டங்களில் மீண்டும் உடல் தகுதித் தேர்வை நடத்த உத்தரவிட்டது. அதன்படி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. வரும் 30-ம் தேதிவரை நடைபெற உள்ள இந்த தேர்வில் 500 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இன்று பெண்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT