தமிழகம்

எபோலா வைரஸ் காய்ச்சலையும் ஹோமியோபதியால் குணப்படுத்த முடியும்: ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மருத்துவர் தகவல்

செய்திப்பிரிவு

ஹோமியோபதி மருத்துவத்தால் எபோலா வைரஸ் காய்ச்சலையும் குணப்படுத்த முடியும் என்று ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் தமிழக தலைமை மருத்துவர் மகேஷ்பதி கூறினார்.

ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனை 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் மொத்தம் 28 கிளைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் அமைந்தகரை, சிஐடி நகர், தாம்பரம் ஆகிய 5 இடங்களில் இம் மருத்துவமனை கிளைகள் உள்ளன. ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டாக்டர் ஸ்ரீகாந்த் மோர்லவர் உள்ளார்.

சென்னையில் செயல்படும் 3 கிளைகளில் சிகிச்சை பெற்று குணமான நோயாளிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, சிஐடி நகர் கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு சிகிச்சை பெற்று குணமான 60 நோயாளிகள் தங்களுடைய அனுபவங்களை அப்போது பகிர்ந்து கொண்டனர்.

அப்போது மருத்துவர் மகேஷ்பதி கூறியதாவது:

ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் சர்க்கரை நோய், மூட்டுவலி, முடக்குவாதம், தோல் நோய், குழந்தையின்மை பிரச்சினை, மூளை வளர்ச்சி குறைபாடு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஹோமியோபதி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்தது. ஹோமியோகேர் இன்டர்நேஷனல் வந்த பிறகு, இம் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித் துள்ளது.

ஹோமியோபதி மருத்துவத்தில் மாத்திரைகள் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஊசி, அறுவைச் சிகிச்சை, வலி, பத்தியம், லேகியம் போன்ற எதுவும் இல்லை. இதில் பக்க விளைவுகளும் இல்லை.

ஹோமியோபதி மருத்துவம் மூலம் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறோம். எபோலா வைரஸ் காய்ச்சலையும் ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT