எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு தொடர்பாக  திண்டுக்கல்லில் உள்ள தனியார் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். | படம்: நா.தங்கரத்தினம். 
தமிழகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு: திண்டுக்கல்லில் 3 இடங்களில் சிபிசிஐடி ஆய்வு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக மூன்று இடங்களில் இன்று (ஆக.5) சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கள் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நகர் முனிசிபல் காலனியில் உள்ள ஸ்கைவே டிரேடர்ஸ் அலுவலகம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள ஸ்கைவே டிரேடர்ஸ், குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் உள்ள லட்சுமி ஸ்பின்னிங் மில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இந்த ஆய்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT