தமிழகம்

வயநாடு நிலச்சரிவு: நீலகிரியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார்(60). இவர் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் கோயில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய கல்யாணராமன் உயிரிழந்தார். அவரது உடல் வயநாடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கூடலூர் புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்தார். தற்போது, அதேபகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT