தேவகோட்டை அருகே விஷ வண்டுகள் கடித்து மயக்கமடைந்த 22 பெண்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தமிழகம்

தேவகோட்டை அருகே விஷ வண்டுகள் கடித்து 22 பெண்கள் மயக்கம்

இ.ஜெகநாதன்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே விஷ வண்டுகள் கடித்து 22 பெண்கள் மயக்கமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இலுப்பக்குடியில் 100 நாள் வேலை திட்டத்தில் இன்று (ஜூலை 25) கண்மாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களை மரத்தில் இருந்து வெளியேறிய விஷவண்டுகள் விரட்டிக் கடித்தன. இதில் 22 பெண்கள் மயக்கமடைந்தனர்.

வண்டுகள் கடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT