தமிழகம்

பல்லாவரம் எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆக.9-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டவழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகனும் மருமகளும் வரும் ஆக.9-ல் நேரில் ஆஜராகமாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தி, சித்ரவதை செய்ததாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர்இவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆன்டோ மதிவாணன், மெர்லினா ஆகியோருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக இவர்கள் இருவரும் வரும் ஆக.9-ல்நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT