தமிழகம்

கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

க.ரமேஷ்

கடலூர்: கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தியை கடலூர் கோட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் சார்பில் கடலூர் கோட்டாட்சியைரை கண்டித்தும், பணியிடை நீக்க ஆணையை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 22) இரவு முதல் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT