தமிழகம்

சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் படப்பிடிப்பு நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தயாரிப் பாளர்கள் மற்றும் இயக்கு நர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப் பாளர் சங்க செயலாளர் சிவா, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் முதல்வர் தனிப்பிரிவில் செவ் வாய்க்கிழமை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நலிந்து கிடந்த தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஊக்கமளிக்க சிறந்த திரைப் படங்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்படுகிறது. கதையின் பின்புலம், ஒருசில தணிக்கை குழு உறுப்பினர்களின் மனோ பாவம் காரணமாக சில நல்ல படங்களுக்கும் ‘யு/ஏ’ சான் றிதழ் கிடைக்கிறது. இந்த சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத் தவிர யு’ சான்றிதழ் படங்களுக்கும், ‘யு/ஏ’ சான் றிதழ் படங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் விருதுகள் ‘யு/ஏ’ சான்றி தழ் படங்களுக்கும் வழங்கப் படுகிறது.

எனவே, தகுதியுள்ள யு/ஏ சான்றிதழ் படங்களுக்கும் அரசின் நிபந்தனைகளுக்கு உட் பட்டு வரிச் சலுகை அனுமதிக்க வேண்டும்.

திருட்டு விசிடி, கேபிள் டிவி மற்றும் தனியார் பஸ்க ளில் திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை திரையிடு வதை தடுக்க வேண்டும்.

சென்னை மாநகரில் தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு அண்டை மாநிலங்களில் படப் பிடிப்பு நடத்துகின்றனர். ஆனால், சிறு பட்ஜெட்டில் படங் கள் எடுப்பவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆகவே, சென்னையில் (மெட்ரோ ரயில் பணிகள் நடக் கும் இடங்கள் தவிர்த்து) படப் பிடிப்பு நடத்த அனுமதி தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT