கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் ஜூலை 27 வரை மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம் சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார், மேல் கூடலூரில் 6 செ.மீ., பதிவானது.

SCROLL FOR NEXT