அமுதா ஐஏஎஸ் | கோப்புப் படம். 
தமிழகம்

‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு

கி.கணேஷ்

சென்னை: உள்துறை செயலராக இருந்து சமீபத்தில் வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்ட, பி.அமுதாவுக்கு முதல்வரின் முகவரி மற்றும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்த பி.அமுதா, அண்மையில் மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இன்று வெளியிட்ட அறிவிப்பில், வருவாய்த்துறை செயலர் பி.அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக இருந்த டி.மோகன், சமீபத்தில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT