கோப்புப்படம் 
தமிழகம்

ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.90,000 பறிமுதல்

செய்திப்பிரிவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையில், காவல் துறை ஜேசுதாஸ், கண்ணன், உதவி ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ராவின் அறையில், கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT