தமிழகம்

அம்மா குடிநீர் விற்பனை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் திருவள்ளூர் மாவட் டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.10.5 கோடியில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. 2.47 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கிறது.

மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தி.நகர், கோயம்பேடு, அடை யாறு, பெசன்ட்நகர், மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, எழும்பூர், கேளம் பாக்கம் உட்பட மொத்தம் 40 இடங் களில் பூத்கள் அமைக்கப்பட்டு ‘அம்மா’ குடிநீர் பாட்டீல்கள் விற்கப் படுகின்றன. கோடை வெயில் சுட் டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த குடிநீரின் விற்பனை அதிகரித் துள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “இதற்கு முன்பு நாளொன்றுக்கு 18 ஆயிரம் பாட் டில்கள் விற்கப்பட்டன. ஆனால், இப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் விற்கப்படு கின்றன. வரும் மே மாதத்தில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT