கோப்புப் படம் 
தமிழகம்

ரயில்வே திட்டப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்: ரயில்வே வாரிய உறுப்பினர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்புப் பிரிவு உறுப்பினர் அனில்குமார் கன்தேல்வால், தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்துக்கு உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அதிகாரிகளிடம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், மின்மயமாக்கல் திட்டங்கள், ரயில்வே பாலங்களின் கட்டுமானங்கள், சுரங்கப்பாதை பணிகள், சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைத்து திட்டப் பணிகளையும் குறித்த காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தினார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர்கள், பாயின்ட்மேன், சிக்னல் பிரிவு பணியாளர்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT