கோப்புப் படம் 
தமிழகம்

திருவல்லிக்கேணியில் மாடு முட்டி சிறுவன் காயம்

செய்திப்பிரிவு

சென்னை: திருவல்லிக்கேணியில் ஏராளமான மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அவ்வப்போது பிடித்து சென்றாலும், அங்கு மாடுகள் சுற்றித் திரிவது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்று யூசுப் என்ற 17 வயது சிறுவனை மாடு முட்டியதில், அவர் காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறார். திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவனை முட்டிய மாட்டை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாட்டின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT