ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் 
தமிழகம்

தேர்தல் தோல்வி: ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் ராஜினாமா

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐஜேகே பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டார். இதில் அவர் திமுக வேட்பாளர் அருண் நேருவிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன்வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஜேகே தோல்வியுற்றதற்கு முழு பொறுப்பேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT