கோப்புப் படம் 
தமிழகம்

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம்விசைப்படகு மீனவர்களை,இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் `எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக் கூடாது எனஎச்சரித்தனர். மேலும், மீனவர்களின் வலைகளை வெட்டிச் சேதப்படுத்தினர்.

இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த 15 விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் அத்துமீற லுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ராமேசுவரம்மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

          
SCROLL FOR NEXT