தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு 

என்.சன்னாசி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படடது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை சுமார் 8:30 மணிக்கு மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர் பி வி உதயகுமார், மணிகண்டன்,மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்பின் அவர் கார் மூலம் புறப்பட்டு பரமக்குடிக்கு சென்றார்.

SCROLL FOR NEXT