சென்னை: சென்னையி்ல் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளி களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளவசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமதுஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன், ‘‘மெட்ரோ ரயில் நிலையங்களில் சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கூடுதல் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சிரமம்: சக்கர நாற்காலிகள் இருந்தும் பூமிக்கு கீழே அடுக்குமாடி தளங்களில் உள்ளமெட்ரோ ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகள் சிரமமடையும் சூழல் உள்ளது’’ என குற்றம்சாட்டினார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், ‘‘தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே உள்ளமெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியைக்குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக் கப்படும்.
அனைத்து வசதிகள்: எனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்’’ என உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டு விசாரணையைதள்ளிவைத்துள்ளனர்.