தமிழகம்

வரதட்சணை கேட்டு பெண் கொலை: கணவர், உறவினருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

மதுராந்தகம் பகுதியில் வரதட் சணை கொடுமையால் இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவன், மாமி யார் உட்பட 3 பேருக்கு செங்கல் பட்டு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தது.

இதுகுறித்து, அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் கூறியதாவது: ‘காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தண்டரைப் பேட்டை யைச் சேர்ந்த சுந்தரவரதர் என் பவரின் மகள் நீலவேணி (28). இவருக்கும், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதி யைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் புருஷோத்தமன் (35) என்பவ ருக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமானது முதலே நீல வேணியை கணவர் கொடுமைப் படுத்தி வந்துள்ளார். மேலும், 2010ம் ஆண்டு, பிறந்த வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கிவருமாறு கூறி நீலவேணியை, கணவர் புருஷோத்தமன் (35), மாமியார் கஸ்தூரி (61), மைத்துனர் மணி கண்டன் (31) ஆகியோர் அடித்து உதைத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து, நீலவேணியின் தம்பி ஜெயச்சந்திரன் அச்சிறுப் பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் புருஷோத் தமன், கஸ்தூரி, மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலை யில் நீதிபதி ஆனந்தி செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தார்.

மூவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி, மூவருக்கும் ஆயுள் தண் டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT