தமிழகம்

மதிமுகவிற்கு 7 எம்.பி.க்கள் உறுதி: வைகோ நம்பிக்கை

செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் மதிமுகவைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, பொங்கல் தினத்தன்று தமது சொந்த கிராமம் கலிங்கப்பட்டியில் தமிழர் திருநாள், பொங்கலை கொண்டாடினார்.

பொங்கல் விழாவில் பேசிய வைகோ: "சொந்த ஊர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மனநிறைவு கொள்கிறேன். கடந்த தேர்தலில், இங்கு ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் மக்கள் மதிமுகவை மட்டுமே ஆதரித்தனர். அதிமுக ஓட்டு பெறவில்லை.

மக்கள் கஷ்டப்படுகிறவர்கள்தான். ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் என்றால் என்ன ஆயிற்று. இருந்தாலும் அதனை தவிர்த்தார்கள். ஓட்டுக்காக ஒரு பைசா கூட கொடுக்க விடமாட்டேன். அவ்வாறு யாராவது பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன். ஓட்டுக்கு கொடுக்க பண வசதி எங்களிடம் இல்லை. அப்படி கொடுக்க தேவையும் இல்லை. பணத்தை கொடுத்து ஓட்டுபெறவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில், எத்தனை தொகுதி என்பதை இப்போது சொல்லமாட்டேன். இருப்பினும் மதிமுகவில் இருந்து குறைந்த பட்சம் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT