கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயம் விற்ற 808 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் 84 இடங்களில் சோதனை செய்து 808 பேரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம்,கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 84 இடங்களில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில், 876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 808 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3,000 லிட்டர் சாராயம், 12,000 லிட்டர் ஊரல் என 15,000 லிட்டர் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT