திருச்சி: மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்ததால், கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 25 போலீஸார் ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீஸார் ஆதரவுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த காவல் நிலை யத்தில் பணியாற்றும் உதவி ஆய் வாளர் தவிர, மற்ற அனைவருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, புகாருக்கு உள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 25 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. வருண்குமார் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். கொள்ளிடம் காவல் நிலையத்தில் போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்ட தால், ஆயுதப்படையில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸார் தற்போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.