கடலூர் மாவட்ட போலீஸாரின் தொடர் கைது நடவடிக்கையால் சாராய வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம்உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மேற்பார் வையில், மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் மதுவிலக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 19-ம் தேதி மதுகடத்திய மற்றும் விற்பனை செய்த 45 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் சிறையில் அடைக் கப்பட்டனர். 11 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 70 புதுச்சேரி மதுபாட்டில்கள், 263 டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல் செய் யப்பட்டன.
இதேபோல் நேற்று முன்தினம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 194 லிட்டர் சாராயம் கைப்பற்றி 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 73 புதுச்சேரி மதுபாட்டில்கள், 260 டாஸ்மாக் மதுபாட்டில்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய் யப்பட்டன.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸாரும், மதுவிலக்கு போலீ ஸாரும் இணைந்து மதுகடத்தல் மற்றும் மதுவிற்பனை செய்வோர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்களிடம் உள்ள பட்டியலின்படி நள்ளிரவு, அதிகாலை வேளையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மிரண்டுபோன சாராய வியாபாரிகள் சிதம்பரம் பகுதியில் உள்ளவர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு அடுத்த எல்லையான மயிலாடுதுறை மாவட்டத்துக்கும், காட்டுமன்னார்கோவில் பகுதி யைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் அரியலூர் மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கும் சென்று உறவினர்கள் வீடு,நண்பர்கள் வீடுகளில் தஞ்ச மடைந்து வருகின்றனர்.
கடலூர், பண்ருட்டி பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகள் புதுச் சேரிக்கு சென்று தங்கியுள்ளனர். விருத்தாசலம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து கடலூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு மற்றும்தனிப்படை போலீஸார் அந்தந்த பகுதி பட்டியலை கையில் வைத்துக்கொண்டு விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை அறிந்தசாராய வியாபாரிகள் வீட்டைபூட்டிக்கொண்டு வெளி மாவட்டங்களில் தஞ்சமடைந்திருப்பதால் காவல் துறையினர் திணறி வருகின்றனர். தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராகி வருகின்றனர்.