தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் கவலைக்கிடம்

எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில்,கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் 5 பேர் கவலைக்கிடமான முறையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்தனர். கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.கள்ளக்குறிச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த மூன்று நாட்களில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களில் வெள்ளிக்கிழமை மதியம் வரை 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 31 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேர் கவலைக்கிடமான முறையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT