கள்ளக்குறிச்சி விவகாரம் கள்ளச் சாராய மரணங்கள் சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக வெளிநடப்பு செய்தன. 
தமிழகம்

“நான் எங்கும் ஓடி ஒளியாமல்...” - முதல்வர் ஸ்டாலின் @ கள்ளக்குறிச்சி விவகாரம்

செய்திப்பிரிவு

சென்னை: “கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சட்டப்பேரவையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஆற்றிய உரையை இணைத்துள்ளார்.

SCROLL FOR NEXT