சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் டாஸ்மாக் கடை அருகில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்டமேலாளர்கள் அனுப்பியுள்ளசுற்றறிக்கை:
அனைத்து மாவட்டத்திலும் தாங்கள் பணிபுரியும் மதுபானக் கடை அருகிலோ அல்லது வேறு பகுதிகளிலோ கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தால், அதனை உடனடியாக மாவட்ட மேலாளர் அல்லதுமாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் தெரிவிப்பவரின் பெயர்மற்றும் செல்போன் எண்கள் ரகசியம் காக்கப்படும். எனவே, உறுதியான தகவலாக இருப்பின் அதுகுறித்து உடனே தெரிவிக்குமாறு மதுபானக் கடை ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.