தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர். படம்: ஆர்.வெங்கடேஷ் 
தமிழகம்

மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரை கண்டித்து கல்லணை கால்வாயில் விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: மேகேதாட்டு விவகாரத்தில் மத்தியநீர்வளத் துறை இணை அமைச்சர் சோமண்ணாவைக் கண்டித்து, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் இறங்கிநேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமை வகித்தார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவைக் கண்டித்தும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணாவைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு தொடர்ந்து 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், 2022-2023-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT