தமிழகம்

மருத்துவக் கல்லூரிகளின் தரவுகளை என்எம்சி இணையப் பக்கத்தில் வெளியிட முடிவு

துரை விஜயராஜ்

சென்னை: நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரவுகள் அனைத்தையும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர் விவரங்கள் உள்பட அனைத்து விஷயங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதை உறுதி செய்யும் நோக்கில், அந்த தகவல்களை என்எம்சி இணையப் பக்கத்தில் வெளியிட இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பொது மக்கள் https://msmer.nmc.org.in/public/performaAdminDetails என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். நிகழ் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT