எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
தமிழகம்

எடப்பாடியில் திமுகவை விட அதிக வாக்குகள்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நன்றி 

த.சக்திவேல்

மேட்டூர்: மக்களவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மாலை எடப்பாடிக்கு வந்தார். எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகைக்கு வந்த அவருக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, மக்களவை தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுகவை விட அதிக வாக்குகள் பெற்றதற்கும், தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி தொகுதி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, எடப்பாடியில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

SCROLL FOR NEXT